Welcome to Jettamil

பிறந்த நாள் நிகழ்வில் பறிபோன மாணவிகள் உட்பட மூவரின் உயிர்..!

Share

பிறந்த நாள் நிகழ்வில் பறிபோன மாணவிகள் உட்பட மூவரின் உயிர்..!

களுத்துறை – களுகங்கையில் நீராடச்சென்ற மூன்று மாணவர்கள் உயிரிழந்துள்ளனர்.

களுத்துறை பாடசாலையில் கல்வி பயிலும் இரண்டு மாணவிகளும் ஒரு மாணவனுமே நேற்று நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். 15 மற்றும் 16 வயதுடைய இரு மாணவிகளும் 17 வயதுடைய மாணவர் ஒருவரும் உயிரிழந்துள்ளனர்.

களுத்துறை பன்வில மற்றும் தொடங்கொடை பகுதிகளை சேர்ந்தவர்களே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

களு கங்கையில் நீராடுவதற்காக சென்ற நிலையில் இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளது. சக மாணவர் ஒருவரின் தாயாரின் பிறந்த நாள் நிகழ்வில் கலந்து கொள்வதற்காக சென்ற மாணவர்களே இவ்வாறு நீராடச் சென்ற நிலையில் உயிரிழந்துள்ளனர்.

சடலங்கள் பிரேத பரிசோதனைக்காக களுத்துறை நாகொட போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளன. களுத்துறை தெற்கு தலைமையக பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை