Welcome to Jettamil

மேலும் சில தூதரகங்களை மூடுவது குறித்து வெளிவிவகார அமைச்சு ஆலோசனை

Share

வெளிநாடுகளில் உள்ள மேலும் சில தூதரகங்களை மூடுவது குறித்து, இலங்கை வெளிவிவகார அமைச்சு மீளாய்வு செய்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

67 நாடுகளில் இலங்கை தூதரகங்கள் மற்றும் தூதரகப் பணியகங்களைக் கொண்டிருந்தது.

ஆப்கானிஸ்தானில் இருந்த தூதரகம் ஏற்கனவே மூடப்பட்ட நிலையில், மேலும் நைஜீரியா, சைப்ரஸ், பிராங்போர்ட், ஆகிய இடங்களில் உள்ள தூதரகங்களை மூடுவதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சு அறிவித்திருந்தது.

இந்த நிலையில் ருமேனியா, ஸ்பெய்ன் ஆகிய நாடுகளில் உள்ள இலங்கை தூதரகங்களை மூடுவதற்காக, அவற்றின் செயற்பாடுகள் குறித்தும் வெளிவிவகார அமைச்சு மீளாய்வு செய்து வருகிறது.

மேலும் சில தூதரகங்களை மூடுவது குறித்து வெளிவிவகார அமைச்சு ஆலோசனை

இந்த இரண்டு நாடுகளிலும் உள்ள தூதரகங்களை மூடிவிட்டு, கௌரவ தூதரகப் பணியகங்களை மட்டும் திறந்து வைத்திருப்பது குறித்து வெளிவிவகார அமைச்சு பரிசீலனை செய்கிறது.

வெளிநாட்டு நாணய மாற்று நெருக்கடி மற்றும் பொருளாதார சூழ்நிலைகளைக் கருத்தில் கொண்டு வெளிநாடுகளில் உள்ள தூதரகங்களில் சிலவற்றை மூடுவதற்கு அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை