ஒமக்ரோன் பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக இன்று முதல் நான்கு வாரங்களுக்கு நாட்டை முடக்குவதற்கு நெதர்லாந்து அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
ஏற்கனவே இஸ்ரேல் மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகள், ஒமக்ரோன் அச்சத்தால் தமது நாட்டின் எல்லைகளை மூடியுள்ள நிலையில் நெதர்லாந்தும், நாட்டை மூடுவதற்கான நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.
டெல்டா திரிபை விட ஒமக்ரோன் மிக வேகமாக பரவுகிறது என்று உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது.
ஒவ்வொரு ஒன்றரை முதல் மூன்று நாட்களுக்கு தொற்றாளர்களின் எண்ணிக்கை இரட்டிப்பாகும் என்றும் உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.