Welcome to Jettamil

காங்கேசன்துறை, கெமுனு பகுதியில் திடீரென மாயமான பிள்ளையார்…

Share

யாழ்.காங்கேசன்துறையில் பொலிஸார் மற்றும் இராணுவத்தினரின் கண்காணிப்பில் உள்ள கெமுனு விகாரைக்கு முன்பாகவுள்ள குமார கோவிலின் பிள்ளையார் சிலை கடந்த 9ம் திகதி தொடக்கம் காணாமல்போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குமார கோயில் காணியை ஆக்கிரமித்து பாதுகாப்பு தரப்பினர் கெமுனு விகாரையை கட்டியிருக்கின்றனர். மேற்படி பிரதேசம் உயர்பாதுகாப்பு வலயத்திற்குள் இருந்தபோது இந்த ஆக்கிரமிப்பு மற்றும் விகாரை அமைப்பு பணிகள் இடம்பெற்றிருந்தது.

அந்த பகுதி விடுவிக்கப்பட்ட நிலையில் குமார கோயில் மீளவும் புனரமைப்பு செய்யப்பட்டது. வழிபாடுகளும் இடம்பெற்றுவந்தது.

இந்நிலையில் கடந்த 9ம் திகதி பிள்ளையார் சிலை இருப்பிடத்திலிருந்து இடித்து பெயர்த்து எடுத்துச் செல்லப்பட்டிருக்கின்றது. அதனை மீள நிறுவ இந்து அமைப்புக்கள் நடவடிக்கை எடுத்துள்ளன.

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை