Welcome to Jettamil

வீடு தூசு தட்டிய முதியவர் கீழே விழுந்து பரிதாபமாக உயரிழப்பு!

Share

வீடு தூசு தட்டிய முதியவர் கீழே விழுந்து பரிதாபமாக உயரிழப்பு!

நேற்றையதினம் (22) வீட்டுக்கு மேலே ஏறி நின்று தூசு தட்டிய முதியவர் ஒருவர் தவறி கீழே விழுந்ததால் உயிரிழந்துள்ளார். அராலி வடக்கு பகுதியைச் சேர்ந்த வடிவேலு பரமகுலதேவராசா (வயது 75) என்ற மூன்று பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,

குறித்த நபர் வீட்டுக்கு மேலே ஏறி தூசி தட்டும் போது கீழே விழுந்துள்ளார். இந்நிலையில் உறவினர்கள் உடனடியாக அவரை மீட்டு யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு சென்றவேளை அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார். உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை