இடைக்கால அரசாங்கத்தை அமைப்பது தொடர்பாக, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கும் சுயாதீன அணியில் உள்ள நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையில் இன்று முக்கிய கலந்துரையாடல் ஒன்று நடைபெறவுள்ளது.
இன் காலை ஜனாதிபதி மாளிகையில் இந்தச் சந்திப்பு நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சுயாதீன அணி நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு, இடைக்கால அரசாங்கத்தை அமைப்பது தொடர்பாக ஏற்கனவே ஜனாதிபதியைச் சந்தித்துப் பேச்சு நடத்தியிருந்தது.
அந்தப் பேச்சுக்களில் அனைத்துக் கட்சிகளையும் உள்ளடக்கிய புதிய பிரதமர் தலைமையிலான இடைக்கால அரசாங்கத்தை அமைக்க ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச இணங்கியுள்ளார் என, மைத்திரிபால சிறிசேன அறிவித்திருந்தார்.
அதேவேளை, பிரதமர் பதவி தொடர்பான ஜனாதிபதி எடுக்கும் முடிவுக்கு தாம் இணங்குவதாக பிரதமர் மகிந்த ராஜபக்ச, ஜனாதிபதியிடம் கூறியுள்ளார் என்றும் தகவல்கள் வெளியாகின.
இந்த நிலையிலேயே சுயாதீன அணியினருடன் ஜனாதிபதி இன்று காலை சந்திப்பை நடத்தவுள்ளதாக பொதுஜன பெரமுனவின் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.