Welcome to Jettamil

இன்று நள்ளிரவு முதல் பாணின் விலை ஏற்றம்

Share

இன்று நள்ளிரவு முதல் 450 கிராம் பாண் ஒன்றின் விலையை 30 ரூபாவினாலும் ஏனைய பேக்கரி உற்பத்திப் பொருட்களின் விலையை 10 ரூபாவினாலும் அதிகரிக்க அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது.

ஒரு கிலோ கிராம் மாவின் விலை தற்போது 250 ரூபாயை தாண்டியுள்ளதாகவும், எரிபொருள் நெருக்கடி மற்றும் மின்வெட்டு ஆகியவை காரணமாக இதர மூலப்பொருட்களின் விலை உயர்ந்துள்ளது இதன் காரணமாக  பேக்கரி தொழில்துறையை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

எனவே பேக்கரி உற்பத்திப் பொருட்களின் விலை  அதிகரிக்கப்படவுள்ளதுடன் ரொட்டி தவிர்ந்த அனைத்து சிற்றுண்டிகளும் 10 ரூபாவினால் அதிகரிக்கப்படும் என அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம்  தெரிவித்துள்ளது. அடுத்த வாரத்திற்குள் பேக்கரி தொழிலில் இருந்து வெளியேற வேண்டி ஏற்படுமென ன அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம்  கவலை வெளியிட்டுள்ளது.

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை