Welcome to Jettamil

திருகோணமலையில் அகற்றப்பட்ட புத்தர் சிலை மீண்டும் நிறுவப்படும் – ஆனந்த விஜயபால தெரிவிப்பு

Share

திருகோணமலையில் அகற்றப்பட்ட புத்தர் சிலை மீண்டும் நிறுவப்படும் – ஆனந்த விஜயபால தெரிவிப்பு

திருகோணமலை பகுதியில் நேற்று இரவு நிறுவப்பட்ட புத்தர் சிலை தொடர்பில் பிரச்சினை ஏற்பட்டதை அடுத்து, அது குறித்துப் பொலிஸாருக்கு முறைப்பாடு கிடைத்தது. இந்தச் சிலை சேதமாக்கப்பட்டதாகக் கூறப்படும் தகவலையடுத்து, மேலதிக சிக்கல்களைத் தவிர்க்கும் முகமாகப் பொலிஸார் சிலையை அகற்றி அதன் பாதுகாப்பை உறுதிப்படுத்தினர்.

இந்த விவகாரம், சிலையை அவசரமாக நிறுவியதால் ஏற்பட்டதாகவும், இப்போது அந்தச் சிலை மீண்டும் அதே விகாரை வளாகத்தில் நிறுவப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. முறைப்படியான பாதுகாப்பு வேலைத்திட்டம் இன்று முதல் நடைமுறைப்படுத்தப்படும் எனப் பொலிஸாருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் அனந்த விஜயபால இன்று சபையில் தெரிவித்தார்.

இதனிடையே, சிலை அமைக்கப்பட்ட இடம் முன்னர் சட்டவிரோதமாக நடத்தப்பட்ட ஒரு உணவகம் என்றும், இது சட்டவிரோத கட்டுமானம் எனவும் கடற்கரைப் பாதுகாப்புத் திணைக்களம் ஒரு முறைப்பாட்டைப் பதிவு செய்திருந்தது. எனவே, இந்த நிலப் பிரச்சினை நீதிமன்றம் ஊடாகவே தீர்க்கப்பட வேண்டும் என்றும், பொலிஸார் இது தொடர்பான விடயங்களை இன்று நீதிமன்றத்திற்கு சமர்ப்பிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

திருகோணமலை நகருக்குள் மீண்டும் துரதிர்ஷ்டவசமான சம்பவங்கள் நடப்பதற்கு இடமளிக்க முடியாது என்றும், புத்தர் சிலையின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படும் என்றும் அமைச்சர் உறுதியளித்தார். நீதி மன்றத்தின் தீர்ப்புக்கமைய அடுத்தகட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும், அமைதியைப் பேணுவதற்குத் தேவையான அனைத்து அறிவுறுத்தல்களும் பொலிஸாருக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை