Welcome to Jettamil

யாழில் சம உரிமை இயக்கத்தின் போராட்டம்! – சிங்கள மக்கள் பங்கேற்பு!

Share

யாழில் சம உரிமை இயக்கத்தின் போராட்டம்! – சிங்கள மக்கள் பங்கேற்பு!

செம்மணி மனிதப் புதைகுழி விவகாரத்திற்கு நீதி கோரியும், உண்மையை வெளிப்படுத்த வலியுறுத்தியும் இன்று சனிக்கிழமை (நவம்பர் 1, 2025) யாழ்ப்பாண நகர் பகுதியில் சம உரிமை இயக்கத்தின் ஏற்பாட்டில் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

‘செம்மணி மனிதப் புதைகுழியை மீண்டும் மூடி மறைப்பதை நிறுத்து: உண்மையை வெளிப்படுத்து’ எனும் தொனிப்பொருளில் இந்தப் போராட்டம் நடைபெற்றது.

போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் பின்வரும் கோரிக்கைகள் அடங்கிய பதாகைகளை ஏந்தி நின்றனர்:

“மேலும் அடக்குமுறைச் சட்டங்கள் வேண்டாம்”

“பயங்கரவாத தடை சட்டத்தை இரத்துச் செய்”

“அனைத்து தேசிய இனங்களுக்கும் சம உரிமையை உறுதி செய்”

“செம்மணியை மீண்டும் புதைக்க இடம் கொடுக்காதே!”

“அனைத்து காணாமல் ஆக்கல்களுக்கும் இப்போதாவது நீதி வழங்கு”

இந்தப் போராட்டத்தில் சிங்கள மக்கள் பலரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை