பேருந்து கட்டணங்களில் இப்போதைக்கு மாற்றம் இல்லை! – தனியார் பேருந்துகள் சங்கம் அறிவிப்பு!
எரிபொருள் விலையில் மாற்றங்கள் ஏற்பட்டதை அடுத்து, தற்போது பேருந்து கட்டணங்களில் எந்தவித மாற்றமும் ஏற்படுத்தப்பட மாட்டாது என அகில இலங்கை தனியார் பேருந்துகள் சங்கம் (All Ceylon Private Bus Owners’ Association) அறிவித்துள்ளது.
அகில இலங்கை தனியார் பேருந்துகள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன இதனைத் தெரிவித்தார்.
அதன்படி, தற்போது நடைமுறையில் உள்ள கட்டணங்களுக்கமையவே பேருந்து கட்டணங்கள் தொடர்ந்து அறவிடப்படும் என அவர் உறுதிப்படுத்தினார்.





