சுகயீன விடுமுறையுடன் ஆரம்பிக்கப்பட்ட தொழில் நடவடிக்கை தற்போது நிறைவடைந்துள்ளதாகவும் இன்று முதல் வழமை போன்று தமது பணிகளில் ஈடுபடவுள்ளதாக பெற்றோலிய தொழிற்சங்கங்கள் தெரிவிக்கின்றன.
சுகயீன விடுமுறையில் நேற்று (18) பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட பெற்றோலிய பொருட்கள் விசேட ஏற்பாடுகள் திருத்தச் சட்டத்திற்கு எதிராக பெற்றோலிய தொழிற்சங்கங்கள் தொழிற்சங்கங்கள் நேற்று (18) தொழில் நடவடிக்கையை ஆரம்பித்துள்ளன.
இதன் காரணமாக கொலன்னாவ, முத்துராஜவெல முனையங்கள் மற்றும் சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் ஆகியவற்றில் இருந்து எரிபொருள் எண்ணெயை வெளியிடும் பணி நேற்று (18) தடைப்பட்டுள்ளதாக தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன.
எவ்வாறாயினும், இன்று முதல் பணிகள் வழமை போன்று இடம்பெறும் என பெற்றோலிய பொது ஊழியர் சங்கத்தின் தலைவர் அசோக ரன்வல தெரிவித்துள்ளார்.