உலகின் மிகப்பெரிய பயணக் கப்பல் புளோரிடாவில் இருந்து பயணம் ஆரம்பம்
டைட்டானிக் கப்பலை விட ஐந்து மடங்கு பெரிய உலகிலே மிகப்பெரிய பயணக் கப்பலான ஐகான் ஆஃப் தி சீ கரீபியன் (Icon of the Seas) கடலில் பயணம் செய்யத் தொடங்கியுள்ளது.
அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தின் மியாமியில் இருந்து ஆரம்பிக்கப்பட்ட இந்த கன்னிப் பயணமானது கரீபியன் தீவுகளை நோக்கி பயணிப்பதாக வெளிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.
இந்த சொகுசுக் கப்பல் 20 தளங்களைக் கொண்டது மற்றும் 1198 அடி நீளம் கொண்டது.
ஒரே நேரத்தில் 5610 விருந்தினர்கள் மற்றும் 2350 பணியாளர்கள் தங்கும் வசதி உள்ளது.
கப்பலை உருவாக்க 900 நாட்கள் ஆனது, இரண்டு பில்லியன் டாலர்களுக்கு மேல் செலவிடப்பட்டுள்ளது.