முட்டை விலையை ஒழுங்குபடுத்த குழுவை நியமிக்க கோரிக்கை
முட்டை விலையை ஒழுங்குபடுத்துவதற்கு ஒழுங்குபடுத்தும் குழுவொன்றை நியமிக்குமாறு வர்த்தக அமைச்சரிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக அகில இலங்கை கோழிப்பண்ணை வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதார திணைக்களத்திடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் அதன் தலைவர் மாதலி ஜயசேகர தெரிவித்தார்.
மேலும், முட்டை இறக்குமதியால் சுமார் 14,000 சிறு முட்டை உற்பத்தியாளர்கள் தொழிலை விட்டு வெளியேறியுள்ளனர் என அவர் தெரிவித்துள்ளார்.