Welcome to Jettamil

கேரொயினுடன் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்று பெண்கள் கைது!

Share

கேரொயினுடன் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்று பெண்கள் கைது

வவுனியாவில் பொலிசாரால் முன்னெடுக்கப்பட்ட விசேட சோதனை நடவடிக்கையில் 16 கிராம் கெரோயின் போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளதுடன் அதனை உடமையில் வைத்திருந்த குற்றச்சாட்டில் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்று பெண்கள் கைதுசெய்யப்பட்டனர்.

நாடளாவியரீதியில் பொலிசாரினால் விசேட போதை ஒழிப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றது.

அதற்கமைய வவுனியாவிலும் குறித்த நடவடிக்கைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளது.

அந்தவகையில் வவுனியா பொலிஸ் புலனாய்வு துறையினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் நேற்றையதினம் இரவு வவுனியா சுகாதாரவைத்திய அதிகாரி பனிமனைக்கு முன்பாக உள்ள வியாபாரநிலையத்தில் பொலிசார் சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டதுடன், குறித்த வியாபாரநிலையத்தின் உரிமையாளரது வீ்ட்டிலும் சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது 16 கிராம் கெரோயின் போதைப்பொருள் மீட்கப்பட்டதாக பொலிசார் தெரிவித்தனர். இதனையடுத்து அதனை உடமையில் வைத்திருந்தார் என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் வியாபாரநிலையத்தின் உரிமையாளரான பெண் மற்றும் அவரது மகள்கள் என மூன்றுபேர் கைதுசெய்யப்பட்டனர்,

கைதுசெய்யப்பட்டவர்களிடம் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ள பொலிசார் அவர்களை நீதிமன்றில் முற்ப்படுத்துவதற்கான நடவடிக்கையினை எடுத்துள்ளனர்.

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை