40 ஆண்டுகளின் பின் கண்டுபிடிக்கப்பட்ட புலிகளின் பதுங்கு குழி
கடந்த காலத்தில் விடுதலை புலிகள் பயன்படுத்தி பின்னர் இலங்கை ராணுவம் பயன்படுத்திய இந்த பெரிய ராணுவ முகாம் பற்றிய தகவல்கள் வெளியாகியுள்ளது. பருத்துறை, திக்கம் பகுதியில் அமைந்துள்ள இந்த முகாம், அதன் சுற்றுப்புற நிலம், கட்டிடங்கள், இயற்கை சூழல், மற்றும் மக்களின் வாழ்வாதாரங்கள் குறித்து விரிவாகப் பேசப்பட்டு வருகின்றது.
ராணுவம் தற்போது வெளியேறிய நிலையில், காணிக்காரர்கள் தங்கள் சொந்த உரிமைகள் மற்றும் காணி நிலங்களை மீட்டுக்கொள்ள முயற்சி செய்து வருவதாகவும், இதன் மூலம் அந்த பகுதியில் உள்ள மக்கள் மீண்டும் தங்களது வாழ்விடங்களைச் செம்மைப்படுத்தும் வாய்ப்பு கிடைத்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
அந்த இடத்தின் இயற்கை வளங்கள், பழங்கால கட்டிடங்கள், கோயில்கள் மற்றும் பண்டைய மரங்கள் பற்றிய விபரங்களை காணக்கூடியதாகவுள்ளது.





