Welcome to Jettamil

நாளை (9) மீண்டும் போராட்டம் வெடிக்கும்…

Share

மீண்டும் நாளையதினம் (09)அரசியல் கட்சிகள், தொழிற்சங்கங்கள் உட்பட அனைத்து தரப்பினரும் இணைந்து ரணில் ராஜபக்சவுக்கு எதிராக மக்கள் கட்டளை பிறப்பிக்க உள்ளதாக வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.

விசேட செய்தியாளர் சந்திப்பு ஒன்றில் இன்று அவர் இதனை தெரிவித்துள்ளார். ரணில் ராஜபக்ச கலப்பு அரசாங்கத்தை அமைத்தாலும் இது மக்களின் எதிர்பார்ப்பல்ல. அதிபர் ரணில் நாற்காலியில் அமர்வதற்கு முன்னர் போராட்டம் தொடர்பில் பல்வேறு விமர்சனங்களையும் முன் வைத்திருந்தார்.

அதிபர் பதவிக்கு பின்னர் போராட்டம் சட்டவிரோதமானது எனக் கூறுவது தவறானது. ரணில் விக்ரமசிங்க வைத்து ராஜபக்சர்கள் காய் நகர்த்திக் கொண்டிருக்கிறார்கள். மக்களின் கனவு இதுவல்ல. எனவே நாட்டில் உள்ள அனைத்து மக்களும் தத்தமது நகரங்களில் எதிர்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுமாறு கூறியுள்ளார்.

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை