Welcome to Jettamil

ஈரானுக்கு ட்ரம்ப் விடுத்த இறுதி எச்சரிக்கை! மின்சாரக் கட்டமைப்பு மற்றும் பாலங்களைத் தகர்க்கத் திட்டம்

Share

ஈரானுக்கு ட்ரம்ப் விடுத்த இறுதி எச்சரிக்கை! மின்சாரக் கட்டமைப்பு மற்றும் பாலங்களைத் தகர்க்கத் திட்டம்

ஈரான் மீதான போர் நடவடிக்கைகளை அடுத்தகட்டத்திற்கு கொண்டு செல்லும் வகையில், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தனது ‘ட்ரூத் சோஷியல்’ தளத்தில் அதிரடி எச்சரிக்கை ஒன்றைப் பதிவிட்டுள்ளார்.

“அழிவு இன்னும் ஆரம்பிக்கவே இல்லை” எனத் தெரிவித்துள்ள அவர், ஈரானில் எஞ்சியுள்ள முக்கிய பகுதிகளை அழிக்கும் வேலையை அமெரிக்க இராணுவம் இன்னும் தொடங்கவில்லை எனக் குறிப்பிட்டு சர்வதேச அளவில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளார்.

நேற்று வியாழக்கிழமை தெஹ்ரானையும் காரஜையும் இணைக்கும் முக்கிய B1 பாலத்தின் மீது நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலைத் தொடர்ந்து, ஈரானில் உள்ள மேலும் பல முக்கிய பாலங்களை அழிக்கப் போவதாக அவர் அச்சுறுத்தியுள்ளார்.

அத்துடன் ஈரானின் மின்சார விநியோகக் கட்டமைப்புகளையும் இலக்கு வைக்கப் போவதாக மறைமுகமாகக் குறிப்பிட்டுள்ள ட்ரம்ப், ஈரானை முழுமையான இருளில் மூழ்கடிக்கத் தயாராகி வருவதாகத் தெரிகிறது.

“புதிய ஆட்சியின் தலைமை என்ன செய்ய வேண்டும் என்பது அவர்களுக்குத் தெரியும், அதனை அவர்கள் மிக விரைவாக செய்ய வேண்டும்!” எனத் தனது பதிவின் இறுதியில் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

இதன் மூலம் ஈரான் நிபந்தனையின்றி சரணடைய வேண்டும் அல்லது அமெரிக்காவின் கோரிக்கைகளை உடனடியாக ஏற்க வேண்டும் என அவர் அதீத அழுத்தம் கொடுத்துள்ளார்.

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை