சுன்னாகம் பொலிஸ் உத்தியோகத்தர் இருவர் அதிரடியாக பணியிடை நீக்கம்!
சுன்னாகம் பொலிஸ் நிலைய பொலிஸ் உத்தியோகத்தர்கள் இருவர் இன்றையதினம் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். வடக்கு மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் திலக் தனபால இதனை உறுதிப்படுத்தியுள்ளார்.
இது குறித்து மேலும் தெரியவருகையில்,
கடந்த சில தினங்களுக்கு முன்னர் நால்வர் ஹெரோயினுடன் சுன்னாகம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டடனர். இவ்வாறு கைது செய்யப்பட்ட நால்வரும் மல்லாகம் நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டனர். பின்னர் பிரதான சந்தேகநபரை தடுப்புக்காவலில் வைத்து விசாரணை செய்ய பொலிஸார் அனுமதி கோரிய நிலையில் மன்றும் அதற்கு அனுமதி வழங்கியது.
தடுப்புகாவல் விசாரணையின் பின்னர் குறித்த சந்தேகநபரை நேற்றையதினம் மல்லாகம் நீதிமன்றத்திற்கு அழைத்துச் சென்றவேளை சந்தேகநபர் தப்பிச் சென்றதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில் அந்த சம்பவத்தின்போது கடமையில் இருந்த இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்களும் இன்றையதினம் பணியிடை நீக்கம் செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.





