உக்ரைன் போர் தொடர்பாக ஐக்கிய நாடுகள் சபையின் அவசரகால சிறப்பு அமர்வு இன்று நடைபெற உள்ளது.
இந்தக் கூட்டத்தைக் கூட்டுமாறு, உக்ரைன், அமெரிக்கா, பிரான்ஸ், இங்கிலாந்து உட்பட 22 உறுப்பு நாடுகள் ஐக்கிய நாடுகள் சபையின் தலைவர் அப்துல்லா ஷாகித்திற்கு கடிதம் எழுதியுள்ளனர்.
இந்தக் கடிதத்தை தொடர்ந்து, ஐ.நா. சபையின் 11 ஆவது அவசரகால சிறப்பு கூட்டம் இன்று நடைபெற உள்ளது.
இந்தக் கூட்டத்தில் உக்ரைன் தொடர்பான தீர்மான வரைவு ஒன்றின் மீது வாக்கெடுப்பு நடத்தப்படவுள்ளது.