இலங்கையில் இருந்து ஆறு பேர் நேற்று அகதிகளாக தமிழகத்துக்குச் சென்றுள்ளனர்.
இலங்கையில் கடுமையான பொருளாதார நெருக்கடி நிலவும் நிலையில், படகு மூலம் அவர்கள், ராமநாதபுரம் மாவட்டம் அரிச்சல்முனை அருகே 4 ஆவது மணல் திட்டில் படகோட்டிகளால் இறக்கி விடப்பட்டுள்ளனர்.
அவர்களை மீட்ட இந்திய கடலோரக் காவல்படையினர், மண்டபம் காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர்.
ஆண் ஒருவர் அவரது மனைவி மற்றும் கைக் குழந்தையுடனும், பெண் ஒருவர் தனது 12 மற்றும் 6 வயதுடைய இரண்டு பெண் குழந்தைகளுடனும் அகதிகளாக சென்றுள்ளனர்.
இந்திய கடலோர காவல்படையினர் மற்றும் தமிழக காவல்துறை புலனாய்வுப் பிரிவினர்அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.