சென்னையில் நேற்று திடீரென வரலாறு காணாத கனமழை பெய்துள்ளது.
மயிலாப்பூரில் நேற்று சுமார் 4 மணிநேரத்தில், 200 20 சென்டி மீற்றருக்கும் அதிகமான மழை பதிவாகியுள்ளது.
மயிலாப்பூரில் ஒரு நாளில் பெய்த அதிகபட்ச மழை இதுவாகும்.
கடந்த சில நாட்களாக வறண்ட வானிலையே நிலவி வந்த சூழலில், சென்னையில் திடீரென கனமழை கொட்டித் தீர்த்தது.
கனமழையால் பல இடங்களில் குளம் போல காட்சியளித்தன.
சென்னை தலைமை செயலகத்துக்கு உள்ளேயும், மழைநீர் புகுந்ததால், ஊழியர்கள் வெளியேறினர்.
அண்ணா மேம்பாலத்தில் கனமழையால் வாகன போக்குவரத்து பாதிக்கப்பட்டு கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.