நயினாதீவு வடக்கு பகுதியில் நேற்று மாலை மினி சூறாவளி தாக்கியுள்ளது.
யாழ்ப்பாணத்தின் பல பகுதிகளில் நேற்று மாலை திடீரென, கடும் காற்றுடன், மழை கொட்டியது.
இதன் போதே நயினாதீவில், மினி சூறாவளி தாக்கியதாகவும், அதனால், ஆறு குடும்பங்களைச் சேர்ந்த 14 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், யாழ்ப்பாண மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் உதவிப் பணிப்பாளர் சூரியராஜ் தெரிவித்துள்ளார்.
இதன்போது, மூன்று வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
சேத விபரங்கள் தொடர்பில் குறித்த பிரதேச செயலகத்தினூடாக விவரங்கள் சேகரிக்கப்பட்டு கொழும்பு அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் அனுப்பி வைக்கப்பட உள்ளதாகவும் தெரிவித்தார்.
அதேவேளை, நேற்று தொடக்கம் குடாநாட்டில் தொடர்ந்து மழையுடன் கூடிய கால நிலை காணப்படுகிறது. இரவிரவாக பல பகுதிகளில் மழை பெய்து கொண்டிருந்தது.
அடுத்த சில நாட்களுக்கு மழையுடன் கூடிய கால நிலை காணப்படும் என்று வானிலை மையங்கள் தெரிவிக்கின்றன.