அமெரிக்க செனட் சபை உறுப்பினர் விமான விபத்தில் தனது குடும்பத்துடன் உயிரிழந்துள்ளார்.
டகோட்டா மாகாணத்தின் செனட் சபை உறுப்பினர் டக் லார்சன், தனது குடும்பத்துடன் உட்டா மாகாணம் கேன்யன்லாண்ட்ஸ் விமான நிலையத்தில் இருந்து சிறிய ரக விமானத்தில் புறப்பட்டுள்ளார்.
இந்நிலையில் அமெரிக்க பெடரஷன் நிறுவனத்துக்கு சொந்தமான பி.ஏ-28 என்ற அந்த விமானம் புறப்பட்ட சிறிது நேரத்திலேயே கீழே விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. விபத்தில் டக் லார்சன் மற்றும் அவரது மனைவி ஏமி மற்றும் இரண்டு மகன்களும் ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளனர்.
இந்த விபத்துக்கான காரணம் தொடர்பில் தேசிய விமான போக்குவரத்து வாரியம் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றதாக கூறப்படுகிறது.