வரலாற்றுச் சிறப்புமிக்க வடமராட்சி,துன்னாலை வல்லிபுர ஆழ்வார் ஆலய வருடாந்த தேர்த்திருவிழா இன்று(28) இடம்பெற்றது.
கடந்த 14 ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகிய மகோற்சவத்தில் இன்று அதிகாலை வசந்த மண்டபப் பூஜை இடம்பெற்று, காலை 8.45 அளவில் ஆழ்வார் தேரில் ஆரோகணித்து வீதி வலம் வந்து பக்தர்களுக்கு அருட்காட்சிகொடுத்தார்.
ஆயிரக்கணக்கான பக்தர்கள் புடைசூழ ஆழ்வார், பிள்ளையார், அம்மன் தனித்தனி இரதங்களில் எழுந்தருளி காட்சியளித்தனர். இந்நிலையில் நாட்டின் பல பகுதிகளிலும் இருந்தும் வருகை தந்த பக்தர்கள் தங்களது நேர்த்திக் கடன்களையும் நிறைவேற்றினர்.
அதேவேளை நாளை பிற்பகல் 3 மணிக்கு சமுத்திரத் தீர்த்தமும், மறுநாள் சனிக்கிழமை கேணித் தீர்த்தமும் இடம்பெற்று வருடாந்த உற்சவம் நிறைவுபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.