Welcome to Jettamil

வட்டுக்கோட்டை இளைஞன் அடித்துக் கொலை – நீதிமன்றில் அடையாள அணிவகுப்பு

Share

வட்டுக்கோட்டை இளைஞன் படுகொலை வழக்கு யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றில் நேற்றையதினம் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு அடையாள அணிவகுப்பு நடத்தப்பட்டது.

உயிரிழந்தவரை தாக்கியதாகக் கூறப்படும் பொலிஸாரின் ஒளிப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகியிருந்தமையால் அடையாள அணிவகுப்பை நடத்தவேண்டாம் என்ற கோரிக்கை சந்தேகநபர்கள் சார்பில் முன்னிலையான சட்டத்தரணிகளால் முன்வைக்கப்பட்டிருந்தபோதும் அது நிராகரிக்கப்பட்டு அடையாள அணிவகுப்பு நடத்தப்பட்டது.

இதன் போது உயிரிழந்த இளைஞரை தாக்கியதாகக் கூறப்படும் 4 பொலிஸாரை அடையாள அணிவகுப்பில் பிரதான சாட்சி அடையாளம் காட்டினார்.

இதனையடுத்து நான்கு சந்தேக நபர்களையும் எதிர்வரும் 19ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க யாழ்ப்பாண நீதவான் ஆனந்தராஜா உத்தரவிட்டார்.

வட்டுக்கோட்டை பொலிஸாரினால் கைது செய்யப்பட்ட நாகராசா அலெக்ஸ் எனும் இளைஞன் சித்திரவதைகளுக்கு உள்ளன நிலையில் நவம்பர் 19ஆம் திகதி உயிரிழந்துள்ளார்.

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை