Sunday, Jan 19, 2025

வெள்ளவத்தையில் நடந்த அதிரடி சுற்றிவளைப்பு – சிக்கிய நபர்கள்

By jettamil

வெள்ளவத்தையில் நடந்த அதிரடி சுற்றிவளைப்பு – சிக்கிய நபர்கள்

கொழும்பு – வெள்ளவத்தை பகுதியில் சுற்றிவளைப்பில் மூன்று சந்தேக நபர்கள் கொக்கெய்ன் மற்றும் குஷ் போதைப் பொருட்களுடன் கைதானதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த கைது நடவடிக்கை கடந்த சனிக்கிழமை வெள்ளவத்தை காவல்துறையின் கொலிங்வூட் மாவத்தை பிரிவில் நடத்தப்பட்டது. இந்த சுற்றிவளைப்பை வலான ஊழல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் மேற்கொண்டனர்.

சுற்றிவளைப்பு நடந்தபோது, தெஹிவளை பகுதியில் வசிப்பவரான 26 வயதான ஒருவரை கைதுசெய்ய முடிந்தது. அவரிடமிருந்து 36 கிராம் கொக்கெய்ன் மற்றும் 203 கிராம் குஷ் போதைப் பொருட்கள், அவற்றுடன் 5 கையடக்கத் தொலைபேசிகள் மற்றும் பணம் கைப்பற்றப்பட்டது.

மேலும், அந்த நபரிடமிருந்து கிடைத்த தகவலின் மூலம், கொலிங்வூட் மாவத்தை பகுதியில் 3 கிராம் 600 மில்லி கிராம் குஷ் போதைப் பொருளுடன் மற்ற இரண்டு சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டனர். இவர்கள் 24 மற்றும் 25 வயதுடையவர்கள், மட்டக்குளி மற்றும் கொழும்பு 14 பகுதிகளை சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது.

கைது செய்யப்பட்ட மூவரும் வெள்ளவத்தை காவல்நிலையத்தில் விசாரணைக்கு உட்படுத்த பட்டுள்ளனர்.

Share This Article

முக்கியச் செய்திகள்

சிறப்புப் பதிவு

நம்மவர் படைப்பு