Sunday, Jan 19, 2025

இறுதி யுத்தத்தின்போது குடும்பம் குடும்பமாக சரணடைந்தவர்கள் எங்கே? – வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் கேள்வி

By Jet Tamil

இறுதி யுத்தத்தின்போது குடும்பம் குடும்பமாக சரணடைந்தவர்கள் எங்கே என யாழ். வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகளின் உறவுகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

விசாரணை செய்த பின்னர் விடுதலை செய்வதாக கூறி இராணுவத்தினரால் அழைத்து செல்லப்பட்டவர்களின் நிலை தொடர்பில் பதில் வழங்க வேண்டும் என யாழ். வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகளைச்சேர்ந்த சிவபாதம் இளங்கோதை தெரிவித்தார்.

இலங்கையில் நீதி கிடைக்காத காரணத்தால் சர்வதேசத்திடம் சென்றதாகவும் சர்வதேசத்திடமிருந்தும் இதுவரை தமக்கான நீதி கிடைக்கவில்லை என்றும் காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகளின் உறவுகள் தெரிவித்துள்ளனர்.

வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகளின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணத்தில் இன்று கவனயீர்ப்பு போராட்டத்தின் போதே இவ்வாறு கருத்து தெரிவிக்கப்பட்டது.

Share This Article

முக்கியச் செய்திகள்

சிறப்புப் பதிவு

நம்மவர் படைப்பு