பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான புதிய அரசாங்கத்துக்கு ஆதரவளிக்க தீர்மானித்துள்ளதாக, தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவரான, நாடாளுமன்ற உறுப்பினர், சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
“எமது கட்சியில் நான் மாத்திரமே நாடாளுமன்றில் அங்கம் வகிக்கின்றேன்.
இந்தநிலையில், நாட்டினதும் மக்களினதும் நலன் கருதி பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான புதிய அரசுக்கு ஆதரவு வழங்க முடிவெடுத்துள்ளேன்” என்று விக்னேஸ்வரன் கூறியுள்ளார்.
நிபந்தனைகளுடன் ரணில் விக்ரமசிங்கவின் அமைச்சரவையில் பங்கேற்கலாம் என்றும், அவர் கூறியுள்ளார்.
இதனால், ரணில் விக்ரமசிங்கவின் அமைச்சரவையில் சி.வி.விக்னேஸ்வரன் இடம்பெறக் கூடும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.