Welcome to Jettamil

புகழ்பெற்ற பொற்கோயிலுக்குள் நுழைந்த இளைஞர் அடித்துப் படுகொலை..!

Share

இந்திய பஞ்சாப் மாநிலத்தில், அமிர்தசரஸில் உள்ள புகழ்பெற்ற பொற்கோயிலுக்குள் நுழைந்த இளைஞர் ஒருவர் அடித்துப் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தகவல் தெரிவிக்கின்றன.

குறித்த கோவிலில் நேற்று சனிக்கிழமை மாலை பிராத்தனை நடைபெற்றுக் கொண்டிருந்தபோது, சீக்கியர்களின் புனித நூலான குரு கிரந்த் சாஹிப் வைக்கப்பட்டுள்ள கருவறையின் மையப்பகுதிக்குள் பாய்ந்த நபரொருவர், அங்கு வைக்கப்பட்டிருந்த வைரம் பதிக்கப்பட்ட வாளை எடுக்க முற்பட்டுள்ளார்.

இச் சம்பவம் நேரடியாக அங்கிருந்த தொலைக்காட்சியில் ஒளிபரப்பானதால், பிரார்த்தனையில் ஈடுபட்டிருந்த அனைவரும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

இதனையடுத்து, அங்கிருந்தவர்கள் குறித்த நபரைப் பிடித்து, தெய்வ நிந்தனையில் ஈடுபட்டதாகக்கூறி அவரை கடுமையாக தாக்கத் தொடங்கினர். இதில் பலத்த காயமடைந்தஅந்நபர் அவ்விடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

சம்பவத்தில் உயிரிழந்தவர் உத்தர பிரதேசத்தைச் சேர்ந்த 20-25 வயதுமதிக்கத்தக்கவர் என்றும் தெரியவந்துள்ளது.

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை