அரச ஊழியர்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்குரிய நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொள்ளும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
அரச ஊழியர்கள், கூட்டுத்தாபனங்கள் மற்றும் சபைகளில் நீண்ட காலமாக தீர்க்கப்படாமல் உள்ள பிரச்சினைகளை முழுமையாக தீர்த்து வைக்க அரசு நடவடிக்கை மேற்கொள்ளவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
சம்பள அதிகரிப்பு மற்றும் பதவி உயர்வு மற்றும் ஆட்சேர்ப்பு செயல்முறை குழப்பம் போன்ற பிரச்சினைகள் இதன்மூலம் தீர்க்கப்படும் என ஜனாதிபதி கூறியுள்ளார்.