Sunday, Feb 9, 2025

இந்தோனேஷியாவில் கொவிட்-19 தொற்றினால் 30ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு!

By Jet Tamil

இந்தோனேஷியாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், 30ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, அங்கு மொத்தமாக வைரஸ் தொற்றினால், 30ஆயிரத்து 277பேர் உயிரிழந்துள்ளனர்.

உலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பினை எதிர்கொண்ட 19ஆவது நாடாக விளங்கும் இந்தோனேஷியாவில், இதுவரை மொத்தமாக 10இலட்சத்து 89ஆயிரத்து 308பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் வைரஸ் தொற்றினால், 10ஆயிரத்து 994பேர் பாதிக்கப்பட்டுள்ளதோடு 279பேர் உயிரிழந்துள்ளனர்.தற்போதுவரை வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட ஒரு இலட்சத்து 75ஆயிரத்து 349பேர் அங்குள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

அத்துடன் இதுவரை எட்டு இலட்சத்து 83ஆயிரத்து 682பேர் வைரஸ் தொற்றிலிருந்து மீண்டு வீடு திரும்பியுள்ளனர்.

Share This Article

முக்கியச் செய்திகள்

சிறப்புப் பதிவு

நம்மவர் படைப்பு