இலங்கையில் பாரதிய ஜனதா கட்சி எனும் பெயரில் புதிதாக கட்சி ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக நேற்று அறிவிக்கப்பட்டது.
இந்த விடயம் தொடர்பில் தௌிவுபடுத்துவதற்காக நேற்று யாழ்ப்பாணத்தில் ஊடக சந்திப்பொன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இந்த கட்சியானது இலங்கை தமிழ் மக்களின் கல்வி வளர்ச்சிக்காகவும் மற்றும் விளையாட்டுத்துறையை மேம்படுத்தவும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக இலங்கை பாரதிய ஜனதா கட்சியின் தவிசாளர் வி.முத்துசாமி தெரிவித்துள்ளார்.