Welcome to Jettamil

இலங்கையில் 17 இலட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது !

Share

இலங்கையில் 17 இலட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

இதில் ஏழு இலட்சத்து 40 ஆயிரம் பேருக்கு சினோபார்ம் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதுடன், ஒன்பது இலட்சத்து 25 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு முதலாவது கொவிஷீல்ட் தடுப்பூசி ஏற்றப்பட்டுள்ளது.

மேலும் 26 ஆயிரத்து 821 பேருக்கு ஸ்புட்னிக் வீ தடுப்பூசியும் ஏற்றப்பட்டுள்ளது.

இந் நிலையில்  நாட்டுக்குத் தேவையான மேலும் 34 இலட்சம் தடுப்பூசிகளை அரசாங்கம் கொள்வனவு செய்யவுள்ளதாக அந்த அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

அடுத்த வாரமளவில் நாட்டுக்கு பத்து இலட்சம் சீனாபார்ம் தடுப்பூசிகள் கிடைக்கவுள்ளன என்றும் அந்த அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை