எதிர்வரும் ஏப்ரல் மாதம் தொடக்கம் அனைவருக்கும் எல்லையற்ற இணைய டேட்டா சேவை வசதி கிடைக்கும் என்று இலங்கை தொலைத்தொடர்பு ஆணைக்குழு அதிரடி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
இலங்கை வாழ் இணைய பாவனையாளர்களுக்கு இது ஒர் மகிழ்ச்சியான செய்தியாக அமைந்துள்ளது.
மேலும் அனைவருக்கும் unlimited internet data packages வழங்குவதற்கான முழு பூர்வாங்க ஏற்பாடுகள் இடம்பெற்று வருவதாக இலங்கை தொலைத்தொடர்பு ஆணைக்குழு அறிவித்துள்ளது.
இந்த ஏற்பாடுகள் அனைத்தும் ஏப்ரல் மாதம் நடுப்பகுதியில் நிறைவடையும் என்று கூறப்படுகிறது.
கடந்த மார்ச் மாதம் முதலாம் திகதி இலங்கையில் இணைய சேவையை வழங்குகின்ற நிறுவனங்களிடமும் இது குறித்த unlimited internet data package பொதிகளுக்கான முழுத்திட்ட வரைபை வழங்குமாறு ஆணைக்குழு கோரியிருந்தது.
இதன் அடிப்படையில் குறித்த திட்ட வரைவுகள் சமர்ப்பிக்கப்பட்டு இருப்பதாகவும் , இதனை முழுமையாக ஆராய்ந்த பின்னர் 2021 ஏப்ரல் மாதம் அளவில் எல்லையற்ற இணைய பொதிகள் சேவை இலங்கை மக்கள் எதிர்பார்க்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் சிறப்பான வசதியாக, நுகர்வோர் தொலைபேசி இலக்கத்தை மாற்றாமல் ஒரே தொலைபேசி இலக்கத்துடன் வேறு ஒரு தொலைத்தொடர்பு இணைப்பு சேவை வழங்குநரை தெரிவு செய்யும் தொழில்நுட்ப வசதியை அறிமுகப்படுத்த உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறான மாற்றங்கள் நிச்சயம் இலங்கை மக்களின் இணைய சேவையில் மிகப் பெரிய ஒர் மாற்றத்தை உருவாக்கும் என்று கருதப்படுகிறது.