இலங்கை கிரிக்கெட் அணியின் வேக பந்து வீச்சாளர் லஹிரு குமார கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உள்ளதாக கூறப்படுகிறது. அத்துடன் மேற்கிந்திய தீவுகள் அணியுடன் இடம்பெறவுள்ள கிரிக்கெட் தொடரில் கலந்துகொள்ளவுள்ள நிலையில் தொற்று உறுதியாகியுள்ளது.
நேற்றைய தினம் (21ம் திகதி) மேற்கொண்ட பிசிஆர் பரிசோதனைகளின் அடிப்படையிலேயே இவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் நிறுவனம் அறிவித்துள்ளது.
போட்டித் தொடருக்கு கலந்து கொள்ள செல்லவுள்ள இலங்கை அணி வீரர்களுக்கு பிசிஆர் பரிசோதனை எடுக்கப்பட்ட நிலையில் அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
எனினும் மேற்கிந்திய தீவுகள் அணியுடனான கிரிக்கெட் போட்டி தொடரில் கலந்துகொள்வதற்காக நாளைய தினம் இலங்கை அணி மேற்கிந்திய தீவுகளுக்கு பயணிக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது….