எட்டு தடவைகள் கருச்சிதைவுக்கு உள்ளான பெண் இன்று அழகான குழந்தையை பெற்றெடுத்தார்
எட்டுத்தடவை கருச்சிதைவு ஏற்பட்ட பெண் ஒருவர் ஒன்பதாவது தடவையாக கருவுற்று இன்று அழகான பெண் குழந்தை ஒன்றினை பெற்றெடுத்துள்ளார்.
குறித்த சம்பவம் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் இடம் பெற்றுள்ளது.
இது தொடர்பாக மகப்பேற்று மருத்துவரை கருத்து தெரிவிக்கையில்,
குறித்த 24 வயதான தாயார் திருமணம் முடித்த காலத்தில் இருந்து தொடர்ச்சியாக எட்டுத்தடவைகள் கருவுற்றிருந்தார். எட்டுத் தடவையும் கரு சிடைவடைந்துள்ள நிலையில் அதற்கான பரிசோதனைகளை மேற்கொண்டு மகப்பேற்று வைத்தியர் சிவராஜா சிஜெதரா அதற்கான சிகிச்சைகளை மேற்கொண்டிருந்தார்.
இந்நிலையில் ஒன்பதாவது தடவையாக கருவுற்றிருந்த தாயாருக்கு கர்ப்பமாவதற்கு முன்னரும், கர்ப்பமாகிய பின்னரும் பல்வேறு சிகிச்சைகள் வழங்கப்பத்டிருந்த நிலையில் இன்று ஆரோக்கியமான குழந்தை ஒன்றினை பிரசவித்துள்ளார்.
குறித்த தாயார் புது வருடதினத்தில் ஆரோக்கியமான குழந்தையை பிரசவித்தமையால் சிகிச்சையளித்த மருத்துவர்களும், குழந்தையை பிரசவித்த தாய் அவரது கணவர் உட்பட அனைவரும் மிகுந்த மகிழ்வடைந்துள்ளனர்.