Welcome to Jettamil

எதிர்வரும் 07ம் திகதி பயணத்தடை தளர்வு!

Share

நாடு முழுவதும் அமுலில் உள்ள பயணத்தடை 7ம் திகதி தளர்த்தப்படுவதற்கான அதிக சாத்தியங்கள் இருப்பதாக பொலிஸ் பேச்சாளர், பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண கூறியுள்ளார்.

சிங்கள தொலைக்காட்சியில் இன்று காலை இடம்பெற்ற நிகழ்வொன்றில் பங்கேற்று உரையாற்றியபோதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் சில நாட்களில் மக்கள் செயற்படும் விதம், பயணக்கட்டுப்பாடுகளை தளர்த்துவதற்கு முக்கிய காரணமாக அமையும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

மக்கள் முகக் கவசங்களை அணிந்து, சமூக இடைவெளியைப் பின்பற்றி ஒழுங்கான சுகாதார விதிமுறைகளை கடைபிடிக்கும் பட்சத்தில் 07ஆம் திகதிக்குப் பின்னர் சுகாதார விதிமுறைகளுக்கு அமைய அனைத்து கடைகளையும் திறக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

ஆயினும் மக்கள் நடந்துகொள்ளும் விதத்தைக் கருத்திற்கொண்டே பயணக்கட்டுப்பாடுகள் தளர்த்துவது குறித்து தீர்மானிக்கபடும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை