Jet tamil
இலங்கை

ஏறாவூர் U.L. தாவூத் வித்தியாலய மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு

ஏறாவூர் U.L. தாவூத் வித்தியாலய மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு

இவ்வருடம் பெப்ரவரி மாதம் எமது மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்தில் ஏறாவூர் கட்டார் கிராமத்தில் அமையப்பெற்ற U.L தாவூத் வித்தியாலயம் கற்றல் கற்பித்தல் செயற்பாடுகளை ஆரம்பிக்கவுள்ளது.

இப்பாடசாலையில் கற்றல் நடவடிக்கையில் ஈடுபடவுள்ள மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு நேற்று (15) U.L தாவூத் வித்தியாலயத்தில் மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தின் உதவிப் பிரதேச செயலாளர் MR சியாஹுல் ஹக் அவர்களின் தலைமையில் இடம் பெற்றது.

இந்நிகழ்வில் ஏறாவூர் நகரசபையின் செயலாளர் MHM ஹமீம், தாய் மண் சங்கத்தின் தலைவர் V காதர் முகைதீன், செயலாளர் SAH அப்துல் மஜித், தாய் மண் சங்கத்தின் நிருவாக உறுப்பினர்கள், ஏறாவூர் நகர பிரதேச செயலக சமூக சேவை உத்தியோகத்தர் SAC நஜிமுதீன், அப்துல் றஹ்மான் பவுண்டேசனின் உபதலைவர் VT றிபாய்தீன், பாடசாலையின் ஆசிரியர், மற்றும் மீராகேணி சனசமூக நிலைய அங்கத்தவர்கள், கட்டார் கிராம பள்ளிவாயல் நிருவாகிகள், சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

ஏறாவூர் ஹிஸ்புல் அல் அஸ்ரப் சன சமூக நிலையத்தினரால் தாய் மண் சங்கத்தினரிடம் விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைவாக இம்மாணவர்களுக்கு இக் கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டது.

அத்தோடு தாய்மண் சங்கத்தினரை கௌரவிக்கும் முகமாக இந்நிகழ்வில் நினைவுச் சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Related posts

புகையிரத விபத்தில் இருவர் உயிரிழப்பு!

kajee

மதுவரித் திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ள முக்கிய அறிவிப்பு

kajee

யாழில் இடம்பெற்ற சர்வதேச குடும்ப நல உத்தியோகத்தர் தின நிகழ்வு…!

Sinthu

சந்நிதியான் ஆச்சிரமத்தின் வாராந்த நிகழ்வில் கெருடபுராணம் எனும் தலைப்பில் ஆண்மீக உரை

Sinthu

இளம் தலைவர்களை ஒன்றிணைத்து சுதந்திரக் கட்சியை மீளக் கட்டியெழுப்பத் தயார்! சந்திரிக்கா அதிரடி அறிவிப்பு

jettamil

வடக்கு மாகாண துறைசார் வல்லுநர்களுக்கு இடையிலான துடுப்பாட்டப் போட்டி

jettamil

Leave a Comment