Welcome to Jettamil

கஞ்சா செய்கைக்கு அனுமதி – உடன் வகுக்கப்படவுள்ள திட்டம்

Share

கஞ்சா வளர்ப்புக்கான சட்டத்தை வகுக்க அனுமதி கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

நாடாளுமன்றத்தில் நேற்றைய (07) சபை ஒத்தி வைப்பு பிரேரணை மீதான விவாதத்தின் போது, நாடாளுமன்ற உறுப்பினர் டயானா கமகே முன்வைத்த யோசனையை, சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் சாந்த பண்டார வழிமொழிந்தார்.

உலகிலுள்ள பெரும்பாலான நாடுகள் கஞ்சாவை செய்கையாக செய்து, பாரிய இலாபத்தை ஈட்டி வருவதாக டயானா கமகே நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

டயானா கமகேயின் இந்த யோசனைக்கு பெரும்பாலான நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆதரவாக கருத்து வெளியிட்டுள்ளனர்.

கஞ்சாவை ஏற்றுமதி செய்கையாக, செய்கை செய்வதற்கு தேவையான சட்டத்தை உடனடியாக வகுத்து, அதனை சட்டமாக்குமாறு முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அனுமதி கிடைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை