கனடாவில் உள்ள ரொரண்டோ பல்கலைக்கழகத்திலே தமிழ் இருக்கை அமைப்பதற்கு தமிழக அரசு உதவிட முன்வர வேண்டும் என்று மக்கள் நீதி மய்யம் கட்சி் தலைவர் கமல்ஹாசன் கோரிக்கை ஒன்றை விடுத்துள்ளார் .
இந்த விடயம் தொடர்பாக கமல் ஹாசன் அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது, ஒரு மொழியினை மேன்மையுற செய்யும் பல்வேறு முயற்சிகளுள் ஒன்று மேலைப் பல்கலைக் கழகங்களில் இருக்கை அமைத்து அங்கு ஆய்வுகள் மேற்கொள்ள வழிவகையினை செய்வது முக்கியமானதாகும்.
கனடாவில் மூன்றரை லட்சத்துக்கு மேல் தமிழர்கள் வாழ்ந்து வருகின்றனர். தமிழர்களுக்கும் , தமிழுக்கும் பலவித முன்னுரிமைகள் வழங்கும் நாடுடாக கனடா உள்ளது, ஜனவரி மாதத் தைத் தமிழ் மரபு மாதமாக அறிவித்து கனடா மக்கள் அதை வருடாவருடம் சிறப்பாகக் கொண்டி வருகிறார்கள்.
193 வருடங்கள் பாரம்பரியம் உள்ள ரொரண்டோ பல்கலைக்கழகத்தில் அமையும் தமிழ் இருக்கையானது , தமிழுக்கான ஆராய்ச்சிகளை உயரிய முறையில் நடத்தி தமிழின் தொன்மையையினையும், பெருமையையும் நிலை நாட்டுவதோடு , உலகின் பல்வேறு தமிழ் ஆய்வு களை சுதந்திரமாக முன்னெடுக்கும் மையப் புள்ளியாகவும் செயற்படும் என்பதில் எவ்வித ஐயமில்லை.
இதற்குக் கிடைக்கும் வெற்றி தமிழக அரசுக்கும் தமிழ் மக்களுக்கும் கிடைக்கும் வெற்றி எனவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது