Jet tamil
இலங்கையாழ்ப்பாணம்

கொட்டோடை பிள்ளையார் ஆலயத்தினரால் சாதனையாளர்கள் கௌரவிப்பு!

கொட்டோடை பிள்ளையார் ஆலயத்தினரால் சாதனையாளர்கள் கௌரவிப்பு

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு கொட்டோடை பிள்ளையார் ஆலய நிர்வாகத்தினரால் நேற்றையதினம் சாதனையாளர்கள் கோரவிப்பு நிகழ்வு நடாத்தப்பட்டுள்ளது.

ஆலய பரிபாலன சபை தலைவர் தங்கராசா பார்த்தீபன் தலமையில் மாலை 3:00 மணியளவில் இடம் பெற்ற இந் நிகழ்வில் கொட்டோடை பிள்ளையார் ஆலய பிரதம குரு செந்தூர குருக்கள் பல்கலைக்கழகத்திற்க்கு தெரிவாகிய சந்திரகுமார் லக்சனா, சிறீதரன் தனுசியா, அழகராசா கபிலன் ஆகியோருக்கும், தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சையில் வெட்டுப் புள்ளிகளுக்கு மேல் பெற்று சாதனை படைத்த யா.அம்பன் அமெரிக்கன் தமிழ் கலவன் பாடசாலை மாணவன் சாந்தரூபன் சாருஜன் ஆகியோர் கௌரவிக்கப்பட்டனர்.

குறித்த சாதனையாளர்கள் கௌரவிப்பில் ஆலய பிரதம குரு சரந்தூரக்குருக்கள் அவர்களுடன் கிராமத்தின் மூத்த பிரஜைகளான க.தில்லையம்பலம், செ.நவரத்தினம், வி.அருந்தவராசா, கா.சுரேந்திரராசா மற்றும் கொட்டோடை அண்ணாமார் ஆலய அர்ச்சகர் க.பத்தமநாதன் ஆகியோரும் இணைந்திருந்தனர்.

இந்நிகழ்வுகளில் கொட்டோடை பிள்ளையார் ஆலய பக்த அடியார்கள் பலரும் கலந்து சிறப்பித்தனர்.

Related posts

எரிபொருள் விலை குறித்து வெளியான தகவல்

Sinthu

புகையிரத விபத்தில் இருவர் உயிரிழப்பு!

kajee

மதுவரித் திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ள முக்கிய அறிவிப்பு

kajee

யாழில் இடம்பெற்ற சர்வதேச குடும்ப நல உத்தியோகத்தர் தின நிகழ்வு…!

Sinthu

சந்நிதியான் ஆச்சிரமத்தின் வாராந்த நிகழ்வில் கெருடபுராணம் எனும் தலைப்பில் ஆண்மீக உரை

Sinthu

இளம் தலைவர்களை ஒன்றிணைத்து சுதந்திரக் கட்சியை மீளக் கட்டியெழுப்பத் தயார்! சந்திரிக்கா அதிரடி அறிவிப்பு

jettamil

Leave a Comment