Welcome to Jettamil

பயணத்தடை தொடர்பில் வதந்திகளை நம்பி மக்கள் அச்சமடையத் தேவையில்லை..!

Share

நாட்டில் தற்போது அமுல்படுத்தப்பட்டுள்ள பயணக் கட்டுப்பாடுகள் கொரோனா தொற்றுநோயால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கையில் எதிர்பார்த்த அளவிலான மாற்றங்கள் எதுவும் ஏற்படாத நிலையில்,

ஜூன் மாதம் முழுவதும் பூரண ஊரடங்குச் சட்டத்தை அமுல்படுத்துவது குறித்து ஆராயப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து இறுதி முடிவு எதிர்வரும் 11 ஆம் திகதி வெளியாகும் என்று கூறப்படுகிறது.

இதன்படி நேற்றுமுன்தினம் கொரோனாத் தடுப்பு செயலணியின் கூட்டம் ஒன்று கொழும்பில் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் கொரோனாத் தொற்றாளர் எண்ணிக்கை தெடர்ந்தும் அதிகரித்து வருவது தொடர்பாகவும் , தொற்றை கட்டுப்படுத்த முடியாமல் உள்ளமை தொடர்பாகவும் விரிவாக ஆராயப்பட்டுள்ளது .

மேலும் இவ்வாறான நிலைமை நீடித்தால் நாடு பாரிய ஆபத்தை சந்திக்க நேரிடும் என பலர் கூட்டத்தில் சுட்டிக் காட்டி யிருந்ததுடன் , கடுமையான உத்தரவுகளுடன் ஊரடங்குச் சட்டத்தை ஆக குறைந்தது 2 வாரங்களாவது நடைமுறைப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தியிருக்கின்றனர் .

ஊரடங்குச் சட்டத்தை மிகவும் இறுக்கமாக பின்பற்றி பல நாடுகளில் கொரோனாத் தொற்றும் பரவல் குறைவடைந்துள்ளமையினை கருத்தில் கொண்டு,

இங்கும் அதே நடைமுறையை பின்பற்றவும் இதற்கான அனுமதியை ஜனாதிபதியிடம் கோருவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது .

மேலும் கொரோனா வைரஸ் பரவது கட்டுப்படுத்துவதற்காக இம்மாதம் நாடு முழுவதும் பயணத் தடையை அமுல் படுத்துமாறும் , குறைந்தபட்சம் எதிர்வரும் 21 ஆம் திகதி வரையாவது கடும் கட்டுப்பாடுகள் அவசியம் எனவும் சுகாதாரத்தரப்புகள் கோரிக்கை விடுத்துள்ள என்பதும் குறிப்பிடத்தக்கது .

பயணதடை நீடிப்பு தொடர்பில் அரச தரப்பில் இருந்து இன்னும் அதிகாரபூர்வமான தகவல் எதுவும் வெளியாகவில்லை. எதிர் வரும் 11 ஆம் திகதியன்றே அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

ஆகவே மக்கள் ஜீன் மாதம் முழுவதும் பயணத்தடை போன்ற போலியான தகவல்களை பார்த்து அச்சமடையத் தேவையில்லை…

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை