கடந்த ஒரு சில நாட்களாக பிரபல இலங்கை தமிழ் நடிகை பூர்விகாவினுடையது என்று கூறி சில வீடியோக்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.
இந்த விடயம் தொடர்பில் நடிகை பூர்விகா தெரிவிக்கையில்,, மேற்படி வீடியோக்கள் எவையும் தன்னுடையது அல்ல என்றும் தன்னை நேரில் அறிந்த அனைவருக்கும் அது தெரியும் என உறுதிபட கூறினார்.
தன்னுடைய வளர்ச்சி பொறுக்காத சிலரால் மேற்றக்கொள்ளப்பட்ட திட்டமிட்ட செயல் எனவும் இது தொடர்பில் மேலதிக நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும் தெரிவித்தார் .
தனது புதிய இன்ஸ்டா புகைப்படம்
குறித்த வீடியோவில் காணப்படும் உடை மற்றும் தோல் நிறத்தின் அடிப்படையிலும் அது தான் இல்லை என்று அனைவருக்கும் தெரியும் என்றும் கூறினார்.
எவ்வித உண்மையும் அறியாத பலர் இணையத்தளங்களிலும், சமூக ஊடகங்களிலும் தவறான தகவல்களை பரப்பி வருவதாகவும் வருத்தத்துடன் கூறினார் .
குறித்த தவறான பதிவுகள், ட்ரோல்கள் பேஸ்புக்,இன்ஸ்டாகிராம் , டிக்டோக் போன்ற தளத்திலிருந்து நீக்கப்படாவிட்டால் சைபர் கிரைம் போலீசாரிடம் முறையிட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் மேலும் கூறியுள்ளார் .
இத்துடன் மேற்குறித்த ஆதாரமற்ற செய்திகள் ஊடாக தனது வளர்ச்சியை யாரும் தடுக்கமுடியாது என்றும், சினிமா துறையில் தொடர்ந்தும் பிரகாசிப்பேன் என்றும் நம்பிக்கையுடன் கூறினார்.