Saturday, Feb 8, 2025

சாவகச்சேரியில் விபத்து, வடமராட்சி நெல்லியடி இளைஞர் பரிதாபமாக உயிரிழப்பு..!

By Jet Tamil

தென்மராட்சி சாவகச்சேரி பகுதியில் இன்று இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மற்றுமொருவர் பலத்த காயமடைந்துள்ளார்.

இந்த சம்பவம் இன்று மதியம் சாவகச்சேரியில் உள்ள ஐயா கடையடிப் பகுதி் ஏ9 வீதியிலேயே இடம்பெற்றுள்ளது.

சாவகச்சேரியிலிருந்து கொடிகாமம் நோக்கிச் சென்ற ஹயஸ் வாகனமும் கொடிகாமத்தில் இருந்து சாவகச்சேரி நோக்கிச் சென்ற மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதிய நிலையில் குறித்த விபத்து இடம்பெற்றது..

இந்த விபத்தில் நெல்லியடி பகுதியை சேர்ந்த ஜெகன் அன்ரனி சியம் (வயது – 20) என்பவரே உயிரிழந்துள்ளதுடன், பருத்தித்துறை கற்கோவளம் பகுதியைச் சேர்ந்த மற்றுமொருவர் சாந்தகுமார் சுதர்சன் (வயது 24) என்பவர் பலத்த காயமடைந்த நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பிலான விசாரணைகளை சாவகச்சேரி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Share This Article

முக்கியச் செய்திகள்

சிறப்புப் பதிவு

நம்மவர் படைப்பு