வரும் பிப்ரவரி மாதம் சீனாவில் நடைபெறவுள்ள குளிர்கால ஒலிம்பிக் தொடரை புறக்கணிப்பதாக அமெரிக்கா அறிவித்தது.
சீனாவின் ஜிங் சியாங் மாகாணத்தில் உய்குர் இஸ்லாமியர்களுக்கு எதிராக சீனா மனித உரிமை மீறல்களை புரிந்து வருவதற்கு கண்டனம் தெரிவித்து இந்த முடிவு எடுக்கப்பட்டதாக அமெரிக்கா தெரிவித்தது.
இதையடுத்து, ஜப்பானும் ஒலிம்பிக் போட்டியை புறக்கணிப்பது குறித்து பரிசீலனை செய்து வருகிறது.
இந்தநிலையில் சீனாவில் நடைபெறவுள்ள குளிர்கால ஒலிம்பிக் தொடரை புறக்கணிப்பதாக, அவுஸ்ரேலியப் பிரதமர் ஸ்கொட் மொறிசன் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார்.