டொரோண்டோ மற்றும் பீல் பிராந்தியங்கள் இன்று முதல் (08.03.2021) ஒண்டாரியோ மாகாணத்தில் நிற அடிப்படையிலான கட்டுப்பாட்டு முறை விதிக்கப்படுகின்றது.
நிற அடிப்படையிலான இம் முறையின் கீழ் Grey நிறத்திலான கட்டுப்பாட்டு முறைக்குள் செல்ல இருக்கின்றது.
இதனடிப்படையில் வியாபார நிறுவனங்கள் சில வரையறைகளுடன் தமது வியாபாரத்தை தொடங்குவதுடன் மக்களும் வியாபார நிலையங்களுக்கு நேரடியாக சென்று தமக்கு தேவையான பொருட்களை வாங்கி செல்ல முடியும்.
Grey நிறத்திலான கட்டுப்பாட்டு முறைக்குள் செல்லும் முடிவு டொரோண்டோவின் முதன்மை மருத்துவ அதிகாரிகளான Dr. Eileen de Villa மற்றும் Lawrence Lohஅவர்களின் பரிந்துரையின் அடிப்படியில் எடுக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.