கோவிட் – 19 தடுப்பூசியை பெற்றுக்கொண்ட பின்னர் குறைந்தது ஆறு மாதங்களுக்கு புகைத்தல் மற்றும் மது அருந்துவதை தவிர்க்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
புகைத்தல் மற்றும் மதுசாரம் தொடர்பான தேசிய அதிகார சபையின் தலைவர், வைத்தியர் சமாதி ராஜபக்ச இந்த கோரிக்கையினை விடுத்துள்ளார்.
இது குறித்து தொடர்ந்தும் பேசியுள்ள அவர்,
“புகைபிடிக்கும் பழக்கம் உள்ளவர்கள் கோவிட் -19 நோயால் பாதிக்கப்படுவதற்கு அதிக வாய்ப்புள்ளது, மேலும் அவர்கள் நோய்த்தொற்றுக்கு ஆளாக நேரிடும் அபாயம் அதிகமாகும்.
புகைபிடித்தல் மற்றும் மது அருந்துவது ஒருவரின் நோய் எதிர்ப்பு சக்தியை பலவீனப்படுத்துகிறது,
அத்தகைய நபர்களுக்கு தடுப்பூசி போடுவது நாட்டில் கோவிட் – 19 வைரஸ் பரவலை தடுக்கும் இலக்கை அடைவதில் எதிர்மறையாக தாக்கத்தை ஏற்படுத்தும்.
புகைபிடித்தல் மற்றும் மதுசாரம் பழக்கம் இல்லாதவர்களுக்கு தடுப்பூசி போடுவது மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
கோவிட் -19 க்கு எதிரான தடுப்பூசி பெற்றவுடன் குறைந்தது ஆறு மாதங்களாவது ஒருவர் புகைபிடித்தல் மற்றும் மதுசாரம் பழக்கத்தினை கைவிட வேண்டும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.