தமிழகத்தில் தற்போது நடைமுறையில் உள்ள கொரோனாத் தொற்று பரவலை தடுப்பதற்கான ஊரடங்கு கட்டுப்பாடுகள் டிசம்பர் 31ஆம் திகதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் வரும் 15 ஆம் திகதியுடன் கொரோனாத் தொற்று பரவலைத் தடுப்பதற்கான ஊரடங்கு உத்தரவு முடிவடைகிறது .
இந்நிலையில் ஊரடங்கு நீட்டிப்பு குறித்தும், புதிய வகை உருமாற்றம் பெற்றுள்ள ஒமிக்ரோன் தொற்று பரவாமல் தடுப்பதற்கான கட்டுப்பாடுகள் குறித்தும்,
முதல்வர் மு.க ஸ்டாலின் தலைமையில் தலைமை சென்னையில் உள்ள தலைமை செயலகத்தில் உயரதிகாரிகள் ஆலோசனை நடைபெற்றது.
ஆலோசனைக்குப் பின்னர் தமிழகத்தில் தற்போது நடைமுறையில் உள்ள கொரோனாத் தொற்று நோய் தடுப்புக்கான கட்டுப்பாடுகள் டிசம்பர் 31-ஆம் திகதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை முதல்வர் முக ஸ்டாலின் பிறப்பித்துள்ளார் .