தானா சேர்ந்த கூட்டம் படம் மூலம் சிறு கதாபாத்திரத்தில் நடித்தவர் மீரா மிதுன்.
பின்னர் பிக்பாஸ் சீசன் 3 இல் பங்கேற்று தன் பொய்முகத்தினை வெளிப்படுத்தி சக போட்டியாளர்கள் மற்றும் மக்களின் வெறுப்பை சம்பாதித்தவர்.
மற்றும் சமூக வலைத்தளங்களில் கவர்ச்சிப் புகைப்படங்களை வெளியிட்டு சர்ச்சையை கிளப்பியவர்.
அத்தோடு மட்டுமல்லாமல், தென்னிந்திய தமிழ் நடிகர்களைப் பற்றி அவதூறாகப் பேசி பல விமர்சனங்களுக்கும் உள்ளாகி இருந்தார்.
இந்நிலையில் தான் தற்கொலை செய்யப்போவதாக டுவிட்டரில் பதிவிட்டு இந்தியப்பிரதமர் நரேந்த்திர மோடிக்கு டாக் செய்துள்ளார்.
இது குறித்து டுவிட்டரில் ” நான் மிகுந்த மன உளைச்சலில் உள்ளேன். தற்கொலை செய்யலாம் எனத் தோன்றுகிறது.
என் மன உளைச்சல் அத்தனையும் எனது சமூக வலைதளத்தில் பதிவு செய்து வருகிறேன். தொடர்ந்து என்னை மனதளவில் துன்புறுத்தி வருவதால் மன நிம்மதியின்றி தற்கொலை செய்யும் நிலையில் உள்ளேன்.
அவ்வாறு நான் என்னையே மாய்த்துக் கொண்டால் என் மரணத்திற்கு காரணமானவர்களைத் தூக்கிலிடுங்கள். எனப் பதிவிட்டு பிரதமரை டாக் செய்துள்ளார்.
மேலும், தான் இது மாதிரியான இன்னல்களை கடந்த மூன்று ஆண்டுகளாக அனுபவித்து வருவதாகவும் இதைத் தடுத்து நிறுத்தக் கோரி மீரா மிதுன் கண்ணீர் மல்க வீடியோ ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.