இளைய தளபதி விஜய் மற்றும் விஜய் சேதுபதி இணைந்து நடித்து கடந்த மாதம் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளிவந்த மாஸ்டர் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
இந்நிலையில் அதனைத் தொடர்ந்து தற்போது தளபதி விஜய் , இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் உருவாகும் தளபதி 65 படத்தில் நடிக்கவுள்ளார், இந்த படத்தின் படப்பிடிப்பு எப்போது நடக்கும் என்று பலரும் எதிர்பார்த்து உள்ளனர்.
இந்நிலையில் அடுத்து விஜயின் தளபதி 66 படத்தை யார் இயக்கப்போவது என்ற கேள்வி இப்போதே பெரிதும் பேசப்பட்டு வருகின்ற ஒன்றாகும், இதில் இயக்குனர்கள் அட்லீ மற்றும் லோகேஷ் கனகராஜ் பெயர்கள் தான் தற்போது குறிப்பிடப்பட்டுள்ளது.
இதே வேளையில் தற்போது இயக்குனர் அட்லீ தன்னுடைய ட்விட்டர் பக்கத்தின் ஊடாக தளபதி விஜய்யின் காணொளி ஒன்றை பதிவிட்டு ஹார்ட் சிம்பல் ஒன்றை போட்டுள்ளார்.
இதனால் தற்போது ரசிகர்கள் பலரும் தளபதி 66 படத்தை நீங்களே தான் இயக்க வேண்டும் என விரும்புபவதாக கூறிவருகின்றனர்.